குற்றப்புலனாய்வு அதிகாரியினால் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் கொழும்பு நவலோக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபையின் முன்னால் பிரதி மேயர் ஆசாத் சாலியினை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் இன்று பார்வையிட்டுள்ளார்.

ஆசாத் சாலிக்கு தற்போது சேலைன் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல் நிலை தேறிவருவதாகவும் வைத்தியர்கள் தம்மிடம் கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் மேலும் கூறினார்.

ஆசாத் அவர்களுடன் சிறிது நேரம் உரையாடக் கிடைத்தாக கூறிய அவர் பெரும் எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்கள் தமது கைது குறித்து நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ள ஆவலுடன் வைத்தியசாலைக்கு வந்ந வண்ணம் உள்ளதாலும்,இன்னும் ஒரிரு தினங்களில் ஊடக மாநாடு ஒன்றை நடத்தவுள்ளதாகவும் ஆசாத“ சாலி, பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்கிடம் தெரிவித்துள்ளார்.

ஆசாத் சாலியினை பார்வையிட அவரது ஆதரவாளர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் எனபலரும் வைத்தியசாலையை நோக்கிச் செல்வதாகவும் கூறப்படுகிறது.

http://www.youtube.com/watch?v=ck5XjaZvIho&feature=player_embedded


 (வீடியோ)


(அபூ நாதில்)

 2012ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற புத்தளம் ஸாஹிரா தேசியக் கல்லூரி  மாணவர்களை பரிசளித்து கௌரவிக்கும் நிகழ்வு இன்று 10-05-2013  பாடசாலை அஸ்வர் மண்டபத்தில் பாடசாலை அதிபர் எம்.எச்.எம். றாஸிக் தலைமையில் நடைபெற்றது.   புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின்; சம்மேளன ஸ்தாபகர் தின நிகழ்வு  12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கொழும்பு 7 இன்டிபென்டன்ஸ் எவனியூவில் உள்ள தேசிய நூலக பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

சம்மேளனத்தின் தேசியத் தலைவர் சட்டத்தரணி அல்-ஹாஜ். ரஷீத். எம். இம்தியாஸ் தலைமையில் நடைபெறும் ஸ்தாபகர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக மனிதவள அமைச்சின் உயர் ஆலோசகர் திரு. எம். ஈ. லயனல் பெனான்டோ அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்.

களனி பல்கலைகழக மூத்த விரிவுரையாளர் போரசிரியர். ஜயந்த செனவிரத்ன அவர்கள் இந்நிகழ்வில் கலந்து ‘இலங்கையில் சமய அடிப்படையிலான கூட்டு வாழ்வு’ என்ற தலைப்பில் சிறப்புறையாற்றவுள்ளார் என சம்மேளனத்தின் பொது செயளாளர் எஸ். லுக்மான் தெரிவிக்கின்றார். 


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

சர்வதேச இஸ்லாமிய கலாசார அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவரும் நிதாஉல் ஹைர் அமைப்பின் பணிப்பாளருமான சைய்ஹ் ஹாலித் தாவுத் தலைமையிலான அரேபிய குழுவினர் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விசேட விமானம் மூலம் வருகை தந்தனர்.

          

மாவட்ட அபிவிருத்திக்குழுத்தலைவரும் பொருளாதார அபிவிருத்திப்பிரதியைமச்சரமான எம் எல் ஏ ஏம் ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளின் பேரில் வருகை தந்த குழுவினர் கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த சமூக சமய கலாச்சார அமைப்புகளின் தலைவர்களை நேரடியாக சந்தித்துக் கலந்துரையாடினர்.

            

பிரதியமைச்சரின் வேண்டுகோளின் பேரில் வருகை தந்த இக்குழுவினரை மாகாண சபை உறுப்பினர் எம் எப் சிப்லி நகர முதல்வர் எஸ் எச் எம் அஸ்பர் பிரதி முதல்வர் ஜெசீம்  கிழக்கலங்கை ஸாஹிரா வலது குறைந்தோர் பாடசாலையின் முதல்வர் முஹம்மட் பஸீர் ஹிறா பௌன்டேசனின் பொறுப்பாளர் மௌலவி மும்தாஸ் தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியத் துறையின் பொறுப்பாளர்  அலியார் றியாழி ஜெம்மியாவின் தலைவர்  மௌலவி அலியார் உற்பட முக்கிய அதிகாரிகள் பலரும் மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு சென்று அவர்களை வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.

ஜே.இர்ஷாத் (ஷர்கீ)

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மையாக அனைத்து முஸ்லிம் பிரதேசங்களிலும் பல நூற்றுக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் தொழுகையினை நிறைவேற்றக்கூடிய வசதிகளைக்கொண்ட  விசாலமா, பிரமாண்டமான,அழகிய தோற்றத்தை கொண்ட பள்ளிவாயல்கள் இருப்பதினையும், இதுபோன்ற ஒரு பள்ளிவாயலாவது எமது ஊரில் இல்லையே என்று கவலைப்பட்ட குறிப்பிட்ட ஒரு குழுவினரால் கடந்த 2008ம் ஆண்டு பொத்துவில் பெரிய பள்ளி வாயலை மஸ்ஜிதுல் அக்ஸாவின் தோற்றத்தில் புணர் நிர்மாணம் செய்வதென தீர்மானிக்கப்பட்டு, பொருளியலாளர் ஜப்பார் அவர்களை தலைவராகவும்,மெளலவி நுஸ்ரத் அவர்களை பொதுச்செயலாளராகவும் கொண்ட அக்குழுவினர் 2008.01.01ம் திகதி கூடிய கூட்டத்தில் கட்டுமாணத்திற்கு தேவையான பணத்தினை பொத்துவில் மக்களிடத்திலும்,வெளி பிரதேசங்களிலும் வசூலித்தல், சேகரிக்கப்படுகின்ற பணத்தினை கட்டுமான பணிக்கு மாத்திரம் செலவிடுதல், இணைய தலம் ஒன்றினை உருவாக்கி தகவல்களை அதனூடாக மக்களுக்கு பகிறங்கப்படுத்துதல் போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டது.
குறித்த குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட பள்ளிவாயலின் கட்டட வேலைகள் கைவிடப்பட்டதோடு, கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் பாவனைக்கு உதவாத நிலையில்  காணப்படுகின்றன. நான்கு வருடங்களாக கட்டட வேலை இடை நிருத்தப்பட்டு கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் பாவனை செய்வதற்கு முடியாமல் துறுப்பிடித்து காணப்படுகின்றன.  
கைவிடப்பட்ட குறித்த பள்ளிவாயலின் புதிய கட்டட வேலையினை ஆரம்பித்து பொத்துவிலில் முதன் முதலாவது கம்பீரமான அழகிய தோற்றத்தைக்கொண்ட பள்ளிவாயல் உருவாகுவதற்கு பொத்துவில் படித்தவர்களும்,அரசில் வாதிகளும்,வசதி படைத்தவர்களும் முன்வருவார்களா???

பொத்துவில் சமூகம் இவ்விடயத்தில் சிந்திக்குமா?????? 


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

உலக இஸ்லாமிய கலாசார நிலையத்தின் அனுசரனையுடன் அபிவிருத்திற்கும் மனிதாபிமானத்திற்குமான சர்வதேச அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உலமாக்களுக்கான கல்விக் கருத்தரங்கு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் காரியலாய மேல்மாடியில் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி) தலைமையில் இடம்பெற்றது.

சவூதி அரேபிய நாட்டின் சிறந்த அறிஞர்களின் விரிவுரைகளுடன் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் சவூதி அரேபிய ரியாத் ஜாமியதுல் இமாம் ஸூஊத் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் உமர் இப்னு ஸூஊத் அல் ஈத், சவூதி அரேபிய சமூக நலன் விரும்பியும் நிதாஉல் கைர் அமைப்பின் தலைவருமான அஷ்ஷெய்க் அபூ ஸாலிஹ் ஹாலித் தாவூத்,சவூதி அரேபிய அல் கஸீம் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அபூ ஸூலைமான் அல் ஹத்லூல்,ரியாத் அல் குர்-ஆன் மனனப் பிரவு உப தலைவர்  அஷ்ஷெய்க் அப்துர் றஹ்மான், சவூதி அரேபிய வளவாளர்களான அஷ்ஷெய்க் இப்றாஹீம், அஷ்ஷெய்க் ஸர்ஹான்,காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி), காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய தலைவர் அஷ்ஷெய்க் அலியார் (ரியாதி), காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் ஆயூட்காலத் தலைவர் மௌலவி முஸ்தபா (பஹ்ஜி),காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி கவிமனி எம்.எச்.எம்.புகாரி (பலாஹி), காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் ஜிப்ரி (மதனி) மற்றும் காத்தான்குடி ,ஏறாவூர்,கல்குடா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த ஜம்மியதுல் உலமா சபை பிரதிநிதிகள்,உலமாக்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

இங்கு ‘உலமாக்கள் ஒன்றினைவதன் மூலமே சுபீட்சமான சமூகத்தை கட்டியெழுப்பலாம்’ எனும் தலைப்பில் சவூதி அரேபிய ரியாத் ஜாமியதுல் இமாம் ஸூஊத் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் உமர் இப்னு ஸூஊத் அல் ஈத், ‘அபிப்பிராய பேதங்களின் போது உலமாக்கள் எவ்வாறிருக்க வேண்டும்’ எனும் தலைப்பில் சவூதி அரேபிய அல் கஸீம் பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அபூ ஸூலைமான் அல் ஹத்லூல் மற்றும் உலமாக்களால் பல்வேறு தலைப்புக்களில் விரிவுரைகள் இடம்பெற்றன.

இதன்போது உலமாக்களுக்கு இராப்போசன விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

‘நான் பிறந்த இந்த மண்ணிலிருந்து நீண்ட தொலைவில் அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்ற போதிலும், இந்த பிரதேசத்தில் உள்ள மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு என்னால் முடிந்த உதவிகளையும், ஆக்கபூர்வமான கல்வி முன்னேற்ற செயற்றிட்டங்களையும் அரசியலுக்கு அப்பால் நின்று செயற்படுத்தி வருகின்றேன். இவ்வாறான இந்த உதவித் திட்டங்களை கல்விமான்களாகிய இங்கு வருகை தந்துள்ள அதிபர்கள் எதிர்காலத்தில் பொறுப்பேற்று செயற்படுத்த வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.’ என்று ஷரீப்தீன் பவுண்டேசனின் 2013ம் வருடத்திற்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு அண்மையில் காத்தான்குடி 1ம் குறிச்சி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தில் நடைபெற்ற போது பவுண்டேசனின் ஸ்தாபக பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் அலவி ஷரீப்தீன் தெரிவித்தார்.

மேலும் அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் ‘கடந்த இருபது வருடங்களாக ஆசிரியராக வெளிநாட்டில் கடமை புரிகின்ற எனது அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதையிட்ட பெருமிதம் அடைகின்றேன். எனது தந்தை ஓர் ஆசிரியராக இந்த ஊரில் மாணவர்களுக்கு செய்த சேவையை தொடர்ந்தம் என்னால் முடிந்த வரை செய்ய வேண்டும் என்பதே எனது அவாவாகும். வெறுமனே சமூகம் எனது பெயரை உச்சரிக்க வேண்டும் என்பதற்காகவோ, ஏனையோர் என்னைப் புகழ வேண்டும் என்பதற்காகவோ கல்விப் பணி செய்யாது, எமது முன்மாதிரியைப் பார்த்து படித்தவர்களும், வசதி படைத்தவர்களும், வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் சகோதரார்களும் தம்மால் முடிந்தளவு இப்பிரதேச வறிய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். வறுமை கல்விக்கு தடையல்ல என்பதை எனது ஆரம்ப வாழ்வில் அனுபவத்தில் கற்றறிந்தவன் நான் என்பதையும், நளீம் ஹாஜியாரின் செல்வத்தில் கல்வி கற்றவன் என்ற வகையில் அவரை எனது வாழ்வில் மிகப்பெரும் முன்மாதிரியாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றேன்’ எனவும் கருத்துரைத்தார்.

சகோதரர் எம். சி. எம். ஜவுபர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்திற்கு சிறப்பு அதிதிகளாக காத்தான்குடி அல்ஹிறா வித்தியாலய அதிபர் அல்ஹாஜ் எம். சி. எம். ஏ. சத்தார்;, மீரா பாலிகா தேசிய பாடசாலை அதிபர் அல்ஹாஜ் எம். எம். இஸ்மா லெப்பை;, பாலமுனை அஸ்ரப் வித்தியாலய அதிபர் எம். ஹைறுள்ளாஹ், பூநொச்சிமுனை இக்றாஹ் வித்தியாலய அதிபர் ஏ. பி. அப்துர் ரசூல் உட்பட இன்னும் பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய மீரா பாலிகா தேசிய பாடசாலை அதிபர் அல்ஹாஜ் எம். எம். இஸ்மா லெப்பை அவர்கள் ‘கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் காத்தான்குடி அந-நாஸர் வித்தியாலயத்தில் ஆசிரியராக மற்றும் அதிபராக நீண்ட காலம் கடமையாற்றிய ஓர் ஆசிரியர்தான் மர்ஹூம் ஷரீப்தீன் ஆசிரியர். தினமும் பாடசாலைக்கு சுபஹூக்கு பின்னர் சென்று தனது கையினால் பாடசாலை முற்றத்தை கூட்டித் துப்பரவு செய்கின்ற ஓர் ஆசிரியராக நான் கண்டிருக்கின்றேன். பாடசாலைக்கு சமூகமளிக்காத மாணவர்களின் வீடுகளுக்கு சென்று தனது சிறிய மாதாந்த சம்பளத்தில் இருந்து ஒரு தொகையை கொடுத்து அப்பியாசக் கொப்பிகளை வாங்கிக் கொடுத்த ஓர் பண்பாளர். இவரை அல்லாஹ் பொருந்திக் கொண்டதற்கு அடையாளமே ஹூசைனியா பள்ளிவாயலில் 1990ம் ஆண்டு ஸஹீதாக்கப்பட்டார். இந்த முன்மாதிரியைக் கொண்டே அவரது மகன் முன்னெடுக்கின்ற இந்த புலமைப்பரிசிலை நீங்கள் கல்விக்காக மாத்திரம் பயன்படுத்த வேண்டும். என வினயாமக் கேட்டுக் கொள்கின்றேன்’ எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்களால் மாணவர்களுக்கு ஷரீப்தின் பவுண்டேசனின் மாதாந்த புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. இவ்வருடம் பவுண்டேசனின்; தெரிவுக் குழுவினால் தெரிவு செய்யப்பட்ட ஆரம்பக் கல்வி கற்கும் 20 மாணவர்களும், இடைநிலைப் பிரிவில் 61 மாணவர்களும், உயர்தரம் கற்கும் 9 மாணவர்களும், பல்கலைக் கழகத்தில் உள்ள 30 மாணவர்களும் உட்பட 120 மாணவர்கள் இதன்போது புலமைப்பரிசில்களைப் பெற்றுக் கொண்டனர். 

யாழ்.மாநகர சபைக்குட்பட்ட சகல தனியார் கல்வி நிலையங்களில் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்களுக்கான வகுப்புக்களை நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் தேவைகள் மற்றும் ஒழுக்க விழுமியங்களில் அவர்களின் வளர்ச்சி எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடல் நேற்று யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அவர்களின் தலைமையில் முதல்வரின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அக் கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமைகளில் சாதாரண தரத்திற்குட்பட்ட மாணவர்களுக்கு வகுப்புக்களை நடாத்த முடியாது. உயர்தர மாணவர்களுக்கு வகுப்புக்களை நடாத்தலாம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணிக்கு முன்னதாக வகுப்புக்களை நடாத்த முடியாது.

இத்தீர்மானங்கள் எதிர்வரும் ஜீன் 01ம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் கட்டுப்பாடுகளை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாழ்.மாநகர முதலவர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அறிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் கௌரவ மாநகர சபை உறுப்பினர்கள் இந்து, கிறீஸ்தவ, இஸ்லாம் மத குருமார்கள் கல்வியியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

(Tn) நாட்டின் தற்போதைய சூழ் நிலையில் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மிகவும் நிதானத்துடன் செயற்பட வேண்டுமென மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடையடைப்பு, ஹர்த்தால் மற்றும் உண்ணாவிரதம் போன்ற செயற்பாடுகள் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு உட்பட்டவையல்ல. எனவே எந்தவொரு விவகாரத்தையும் ஜனநாயக வழியிலான பேச்சுவார்த்தை மற்றும் பிரார்த்தனைகள் மூலமாக தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டுமென அவர் மேலும் கேட்டுள்ளார்.

ஆஸாத் சாலி கைது செய்யப்பட்டிருப்பது சட்டத்திற்குட்பட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பாக குரல் கொடுத்தார் என்ற ஒரே காரணத்திற்காக முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் அமைப்புக்கள் அஸாத் சாலியின் விடுதலை குறித்து ஜனாதிபதியிடம் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் உணர்ச்சிக்கும் வெற்றுக் கோஷங்களுக்கும் அடிமைப்பட்டவர்களாக செயற்படுவதன் மூலம் நிலைமையினை சிக்கலாக்கிக்கொள்ளக்கூடாது என்றும் முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கடையடைப்பு, ஹர்த்தால் செய்வதன் மூலமாக அரசாங்கத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்குமிடையில் பய னற்ற முரண்பாடுகளைத் தோற்றுவிக்கக் கூடாது.

சமூக விரோத சக்திகளின் சதிவலையில் கிழக்கு முஸ்லிம்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது என்றும் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் கேட்டுள்ளார்.

+

(Rasminmisc)


பள்ளிப்படிப்பை பலவிதமான கஷ்டங்களையும், இன்னல்களையும் தாங்கிபடித்து முடித்து விட்டு தனது எதிர்கால கணவுகளை நனவாக்க எண்ணி ஒவ்வொரு மாணவனும் காலடி எடுத்து வைக்கும் இடம் தான் பல்கலைக் கழகங்கள். எதிர்கால வாழ்வில் சிறப்பான ஒரு இடத்தை அடைய வேண்டும்,கவுரவமான வாழ்வு வாழ வேண்டும், நாட்டின் சிறந்த குடிமகனாகத் திகழவேண்டும் என்பதற்காக பல கோடிகளை செலவு செய்து ஒவ்வொரு நாட்டின் அரசாங்கங்களும் தங்கள் நாட்டு மாணவர்களின் மேற்படிப்பிற்காக பல்கலைக் கழகங்களை நிறுவுகின்றன.


பள்ளிப் படிப்பில் காலடி தடம் பதிக்கும் மாணவர்களில் 10 வீதத்திற்கும் குறைவானர்கள் தாம் பல்கலைக்கழக பட்டப் படிப்பிற்கு தகுதி பெருகிறார்கள். அந்த தகுதியை அடைந்து கொள்வதற்கு தனது பாடசாலைக் காலத்தை பல வழிகளிலும் சிறப்பானதாக பயன்படுத்தியிருக்க வேண்டும்.


இப்படி தனது வாழ்நாளின் மிக முக்கிய இளமைப் பருவத்தை கல்விக்காக செலவு செய்துவிட்டு அதன் பிரதிபலனாக பல்கலைக் கழக நுழைவினைப்பெற்று வரும் மாணவர்கள், அங்கு பல தரப்பட்ட மொழி, இன, குண, நிறவேற்றுமைகளையுடைய மாணவர்களை சந்திக்கிறார்கள். பல்கலைக்கழக படிப்பிற்காக உள்நுழையக் கூடிய மாணவர்கள் பலர் பல்கலைக் கழகத்தின் மூத்த மாணவர்களின் பகிடிவதை (Ragging) என்ற மூர்க்க குணத்தினை சந்திக்க நேரிடுகிறது.


கல்லூரிப் படிப்பில் சிறந்து விளங்கி நாட்டின் எதிர்கால நலன்களை சிறப்பாக முன்னெடுக்க வேண்டிய பொருப்பு சாட்டப்படும் மாணவ சமுதாயத்திற்குள் தோன்றியுள்ள இந்த பகிடிவதை (Ragging) கலாசாரத்தை ஒரு நவ நாகரீக புற்று நோய் என்று வர்ணிப்பது சாலச்சிறந்தது.


ஏன் என்றால் கல்வியில் முன்னேற்றம் கண்டு சிறந்த கல்விமானாக வெளிவர வேண்டிய எத்தனையோ  மாணவர்கள் இந்த ரேகிங்க் கொடுமையினால் கல்விப் படிப்பையே இடை நிறுத்தி விட்டு கூலித் தொழிலாளியாக அன்றாக வாழ்வுக்கு அல்லல்படும் நிலையை இன்று பார்க்கக் கிடைக்கிறது. புதிதாக கழகம் நுழையும் மாணவர்கள் மூத்த மாணவர்களுடன் சிறப்பானமுறையில் பழக வேண்டும், புரிந்துணர்வு ஏற்பட வேண்டும் என்றநோக்கத்தில் தாம் இந்த பகிடிவதையில் (Ragging) ஈடுபடுவதாக இதனை ஆதரிக்கும் அறிவாளிகள் (?) வியாக்கியானம் தருகிறார்கள்.


உண்மையில் இதுதான் அவர்களின் எண்ணம் என்றால் புதிய மாணவர்களை நல்ல முறையில் உபசரித்து, கவுரவப்படுத்தி, அன்பாகவும், பண்பாகவும், பாசமாகவும் பழக வேண்டும். அப்படி யாரும் நடந்து கொள்வதில்லை. உடலியல் மற்றும் உளவியல் ரீதியில் அவர்களைக் கொடுமைப்படுத்தி,சித்திரவதை செய்து, பாலியல்  துன்புறுத்தல்களுக்கும் உட்படுத்துகிறார்கள் இதற்குப் பேர்தான் புரிந்துணர்வா? ஆரம்பத்தில் பல்கலைக் கழகங்களில் மாத்திரம் தொற்றிக் கொண்டிருந்த இந்தநோய் தற்போது பாடசாலைகள், கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள்,அரச அலுவலகங்கள், அரபிக் கல்லூரிகள், பெண்கள் கல்லூரிகள் என்றுஎல்லாத் துறைகளிலும் வேர் விட்டு வளர்ந்துவிட்டது.


ரேகிங்க் (Ragging) தோன்றுவதற்காக காரணங்கள்


ரேகிங்க் என்ற இந்த மாணவர் புற்று நோய் தோன்றுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அவற்றில் மிக முக்கியமான சில காரணங்களை மட்டும் நாம் அலசுவோம்.


1.பழிக்குப்பழி.


புதிதாக பல்கலைக் கழகம் நுழையும் மாணவர்களை ரேகிங் என்ற பெயரில் கொடுமைப் படுத்துவதில் முன்னுரிமை பெற்றவர்கள் இரண்டாம் வருட மாணவர்கள் தாம். இது தவிர 3ம் 4ம் வருட மாணவர்களின் ஒத்துழைப்பும் இவர்களுக்கு தவறாமல் கிடைக்கிறது.


தான் பல்கலைக் கழகம் நுழையும் போது தன்னை கொடுமைப் படுத்தினார்கள் ரேகிங் என்ற பெயரால் வதை செய்தார்கள் என்பதற்காக தனக்குப் பின் அடுத்த வருடம் படிக்க வருபவர்களிடம் தங்கள் கைவரிசையை இவர்கள் காட்டுகிறார்கள்.


தான் பாதிக்கப்பட்டேன் என்பதற்காக பழி வாங்குவதாக இருந்தால் யார் பாதிப்பை உண்டாக்கினானோ அவனைத் தான் பழிவாங்க வேண்டும் ஆனால் பகிடிவதை என்ற பெயரில் யாரென்ரே தெரியாத, எந்தவொரு தப்பும் செய்யாத அப்போதுதான் கழகத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் மாணவனை இவர்கள் துன்புறுத்துகிறார்கள்.


அடுத்த வருடம் இவன் அடுத்து புதிதாக நுழைபவனை துன்புறுத்துவான் இது இப்படியே காலா காலத்திற்கு தொடர்ந்து கொண்டே போகும், போய்க் கொண்டு தான் இருக்கிறது.


ஆக எவனோ செய்யும் குற்றத்திற்கு எவனோ ஒருவன் பாதிக்கப் படுகிறான் என்பது முறையா?


இது எந்த விதத்தில் நியாயம்?


கல்லூரி நிர்வாகத்தின் (Administrative Bodies) கண்காணிப்பின்மை.


பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், அரபிக் கல்லூரிகள், பெண்கள் பாடசாலைகள், என எல்லாத் துறைகளிலும் இந்த பகிடிவதை பாய் விரித்துப் படுத்திருப்பதற்கு இன்னுமொரு முக்கிய காரணமும் உள்ளது. அதுதான் கல்லூரிகளின் நிர்வாகத்தில் கண்காணிப்பில் உள்ள குறைபாடுகள்.


கல்லூரியை நடத்த ஆசை படுபவர்கள், அதிபர்கள், முதல்வர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ள ஆசைப்படுபவர்கள் இது போன்ற மாணவ, மன நோயாளிகளின் ரேகிங் நோயை நீக்குவதற்கு எந்த விதத்திலும் முயலாமல் இருப்பது கவலைக்குறியதே!


கல்லூரி தொடர்பான சரியான சட்ட திட்டங்களை தொகுக்காமை


அப்படித் தொகுத்தாலும் ஏட்டுச் சுறக்காய் போல் எழுத்தில் மாத்திரம் வைத்துக் கொண்டு அதனை நடை முறைப்படுத்தாமை.


தங்களுக்கு வேண்டியவர்களுக்காக கல்லூரியின் சட்ட திட்டங்களை திசை திருப்பிக் கொள்வது போன்ற செயல்பாடுகளினால் தான் இந்த ரேகிங் என்ற கல்லூரிப் புற்று நோய்க்கு இன்னும் சரியாக முடிவு எட்டப்படாமல் இருக்கிறது.


 2.சட்டத்தின் நெகிழ்வுத் தன்மை.


பகிடிவதை என்ற இந்த உடல், உள வதை ஏற்படுவதற்கான இன்னுமொரு முக்கியமான காரணம் என்னவென்றால் நமது நாடுகளின் சட்டங்களின் நெகிழ்வுத் தன்மை அல்லது கையாலாகாத் தனம் என்று கூட சொல்லலாம்.

சாதாரணமாக ஒரு பொது மகன் இன்னொருவனைத் தாக்கினாலே அதற்கு பெரிய பெரிய சட்டங்களை உருவாக்கியுள்ள இன்றைய சட்டத் துறை எந்தப் பிரச்சினைக்கு முக்கியமான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டுமோ அந்த பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறது.


ரேகிங் (Ragging) என்ற பெயரில் செய்யப்படும் இந்த கொடூரங்களுக்கு எந்த நாட்டிலும் சரியான அல்லது தகுந்த தண்டனைகள் சட்டத்தில் இல்லை.


சட்டம் ஒரு இருட்டறை என்ற வாசகத்திற்கு ஒப்பாகத்தான் பல நாட்டின் சட்டங்கள் ஓட்டை உடைசல்களுடன் காணப்படுகின்றன.


ரேகிங் தொடர்பான குற்றங்களை சரியாக கண்காணிப்பதற்கும் அதற்கு சரியான தண்டனைகளை கொண்டு வருவதற்கும், காவல் துறையினருக்கோ அல்லது சட்ட அமலாக்கள் பிரிவு அதிகார சபைகளுக்கோ போதுமான அளவு இடமளிக்கப்படாமல் இருப்பதும் சட்டத்தின் ஓட்டைகளில் ஒன்றுதான்.


வரையறுக்கப்பட்ட சரியான சட்டதிட்டங்கள் உருவாக்கம் செய்யப்படாமையினால் தான் இக்குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் அல்லது கண்டுபிடிக்கப் பட்டாலும் தண்டனை அனுபவிக்காமல் இருக்கிறார்கள்.


3.விரிவுரையாளர்களின் கையாளாகத் தனம்


பல்கலைக் கழகங்களில், கல்லூரிகளில் பாடம் நடத்தும் விரிவுரையாளர்களும் இந்த பகிடிவதை என்ற மாபாதக குற்றத்திற்கு காரணமாக அமைகிறார்கள் என்றால் அது மிகையில்லை.


தன் கண் முன்னால் தனது கல்லூரியின் மாணவன் அல்லது மாணவி பாதிக்கப்படும் போதும் கூட அதனைக் கண்டு கொள்ளாத பல விரிவுரையாளர்களை நாம் அறியமுடிகிறது. (ஒரு சிலரைத் தவிர)


பல்கலைக் கழக வளாகத்தில் எந்தத் தவறு நடந்தாலும் கண்டும் காணாதது போல் எத்தனையோ விரிவுரையாளர்கள் சென்று விடுகிறார்கள். காரணம் அது தனக்கு தேவையற்ற வேலையாம். இதுதான் உயரிய நற்பண்பா? இப்படிப்பட்டவர்கள் எல்லாம பேராசிரியர்களாக இருந்தால் கல்லூரிகள் பல்கலைக் கழகங்கள் நல்ல பெயரை பெற்றுக் கொள்ள முடியுமா?


சில கல்லூரிகளில் விரிவுரையாளர்களே இந்த கொடுமைக்கு உத்வேகம் கொடுக்கிறார்கள், இது தொடர்பான தூண்டுதல்களை மேற்கொள்கிறார்கள் இனி எப்படி மாணவ சமுதாயம் வெற்றி பெற முடியும்?


எவன் எப்படிக் கெட்டுப் போனாலும் பிரச்சினை இல்லை தனது வேலையும், வேலைக்கேற்ற சம்பளமும் சரியாக முறையான நேரத்தில் கிடைக்க வேண்டும்.


விரிவுரையாளர்களே ! பேராசிரியர்களே ! சுயநலம் எக்காலத்திலும் பொது நலத்திற்கு வழிவகுக்காது என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.


மாணவர் அமைப்புக்களின் (Students Councils) விட்டுக் கொடுப்பு


ஒவ்வொரு பல்கலைக் கழகங்களிலும் மாணவர் அமைப்பு அல்லது மாணவர் பேரவை என்ற ஒன்று இருக்கும். மாணவர்கள் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளை மேல் மட்டத்திற்கு கொண்டு செல்பவர்கள் இவர்களாகத்தான் இருப்பார்கள் சாப்பாடு சரியில்லை என்றால் போராட்டம் நடத்துவார்கள்.வகுப்பில் போதிய வசதியில்லை என்றால் தர்னா அறிவிப்பார்கள்.


இப்படி எதற்கெல்லாமோ போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், தர்னாக்கள் என்று அறிவிப்பவர்கள் தமது சகோதரன் ரேகிங் என்ற பெயரால் கொடுமைப்படுத்தப் படும் போது கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். (ஒரு சில கல்லூரி மாணவர் அமைப்புகள் மாத்திரம் ஒரளவுக்கு சரியாக இருக்கிறார்கள்)


தனது கல்லூரியைச் சேர்ந்தவன் சக மாணவர்களினால் தாக்கப்படுகிறான், துன்புறுத்தப்படுகிறான், உயிர் இழப்பைக் கூட சில சந்தர்பங்களில் சந்திக்கிறான் இப்படிப்பட்ட கஷ்டங்களையெல்லாம் இந்த அமைப்புகள் எப்போதாவது கண்டுகொள்கிறதா என்றால் இல்லை.


தேவைக்கு இல்லாத் மாணவர் அமைப்புகள் எதற்காக? இவர்களினால் என்ன நன்மை கல்லூரிக்கு ஏற்பட்டுவிடப் போகிறது?


பகிடிவதையின் வகைகளும், பாதிப்புக்களும்.


உயிர் பாதிப்புக்களை உண்டாக்கி, படிப்பை இடை நிறுத்தம் செய்து, உடல் ஊனம் போன்ற பாதிப்புக்களுக்கு ஆளாகி உயிர் பிழைத்தால் போதும் என்று நினைத்து ஓடும் அளவுக்கு அதிக பாதிப்புக்களை இந்த பகிடிவதைப் கொடுமை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.


எவ்வளவு துன்பங்கள், உயிரிழப்புகள் நிகழ்ந்தாலும் இந்த ரேகிங் கொடுமை நின்றபாடில்லை என்பதே கசப்பான உண்மையாகும்.


பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிப் பாசரை, போலிஸ், இராணுவ பயிற்சி மையம் என்று எல்லாத் துறைகளிலும் பெரும்பாலும் மூன்று வகையிலான பகிடிவதை (Ragging) கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன.


உடலியல் ரீதியிலான பகிடிவதை (Ragging)

உளவியல் ரீதியிலான பகிடிவதை (Ragging)

பாலியல் ரீதியிலான பகிடிவதை (Ragging)


1992ல் டாக்டர் பண்டார (இலங்கை) என்பவர் பகிடிவதை தொடர்பாக செய்த ஆராய்ச்சியில் மேற்கண்ட பாதிப்புகள் நிகழ்வதாக கண்டறிந்துள்ளார்.


அவருடைய ஆராய்ச்சியில் மேலும் தெரியவருவதாவது,


தான் ஆய்வுக்குட்படுத்திய மாணவர்களில் 60 சதவீதமானவர்கள் உளவியில் ரீதியிலான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர்.


30 சதவீதமானவர்கள் உடல் ரீதியிலான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர். கல்வியல் 13 சதவீதமானவர்கள் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளனர். இது டாக்டர் பண்டார (இலங்கை) அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வரும் உண்மையாகும்.